Camera Phone-களின் ராஜா..! ஆகஸ்ட் 17 இந்தியாவுக்கு வரார்.. வரார்..!

|

Best Camera Phone (பெஸ்ட் கேமரா போன்) என்று தேடினால்.. உங்களுக்கு ஒரு சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் கிடைக்கும் அல்லவா? அதில் நிச்சயம் 1 அல்லது 2 விவோ மாடல்களாவது இருக்கும்!

ஏனெனில் ஆரம்ப காலத்தில் இருந்தே மொபைல் போன் கேமராக்களில் புரட்சிகரமான அம்சங்கள் மற்றும் புதுமைகளை கொண்டு வருவதில் Vivo நிறுவனம் ஒரு கில்லாடியாக திகழ்கிறது.

Vivo-வின் பெஸ்ட் கேமரா மொபைல்கள் என்கிற பட்டியலில் சேரும் அடுத்த Phone!

Vivo-வின் பெஸ்ட் கேமரா மொபைல்கள் என்கிற பட்டியலில் சேரும் அடுத்த Phone!

அது Vivo V25 Pro ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விவோ V25 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் "நிறம் மாறும்" பேக் பேனலுடன் வரும் என்பதையும் விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

புதிய விவோ வி25 சீரீஸின் கீழ் Pro மாடலுடன் சேர்த்து Vivo V25 மற்றும் Vivo V25e ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகும் என்று ஊகிக்கப்படுகிறது.

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

செம்ம டிஸ்பிளே.. சூப்பர் ப்ராசஸர்!

செம்ம டிஸ்பிளே.. சூப்பர் ப்ராசஸர்!

Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகமானது வருகிற ஆகஸ்ட் 17 அன்று மதியம் 12 மணிக்கு நடக்கும் என்கிற அறிவிப்போடு சேர்த்து Vivo நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தி உள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 'கலர் சேஞ்சிங் பேக் பேனல்' உடன் வரும் மற்றும் இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட்-ஐ வழங்கும் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும்.

மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 66W ஃபிளாஷ் சார்ஜுக்கான ஆதரவுடன் 4,830mAh பேட்டரியை பேக் செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் மெயின் கேமரா சென்சார் உடன் வரும்!

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம், 3டி கர்வ்டு ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் வடிவமைப்பு, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 ஸ்கின் போன்ற அம்சங்களை கொண்டு வரலாம்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!

கோல்ட் கலர்ல.. சும்மா பளபளனு.. கூட ட்ரிபிள் ரியர் கேமரா வேற!

கோல்ட் கலர்ல.. சும்மா பளபளனு.. கூட ட்ரிபிள் ரியர் கேமரா வேற!

சமீபத்தில் வெளியான ஒரு லீக் போட்டோ வழியாக விவோ வி25 ஸ்மார்ட்போன் ஆனது (அதாவது ப்ரோ மாடல் அல்ல, வெண்ணிலா மாடல்) கோல்ட் கலர் வேரியண்ட்டில் அறிமுகமாகும் என்பதை அறிய முடிகிறது. அது 'சன்ரைஸ் கோல்ட்' என்று அழைக்கப்படலாம்.

அதே லீக் போட்டோ வழியாக வி25 மாடல் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறும் என்பதையும், அதில் எல்இடி ஃபிளாஷ் இருக்கும் என்பதையும் அறிய முடிகிறது. இது 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கலாம்

சன்ரைஸ் கோல்ட் கலர் ஆப்ஷனை தவிர்த்து விவோ வி25 ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் பிளாக் வண்ண விருப்பத்திலும் அறிமுகம் செய்யப்படலாம்.

வெண்ணிலா மாடல் ப்ரோ மாடலை போல இருக்காது!

வெண்ணிலா மாடல் ப்ரோ மாடலை போல இருக்காது!

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (@passionategeekz) வழியாக நமக்கு கிடைத்த தகவலின்படி, Vivo V25 ஸ்மார்ட்போன் பிளாட் ஃபிரேம் டிசைனையே கொண்டிருக்கும்; அதாவது ப்ரோ மாடலை போல கர்வ்டு டிசைனை பெறாது!

மேலும் வி25 மாடலின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் இரண்டு பெரிய கேமராக்கள் மற்றும் ஒரு சிறிய கேமரா என்கிற மிகவும் நீளமான கேமரா ஐலேண்ட் இருக்கும். அதில் எல்இடி ஃபிளாஷும் அடங்கும்.

மேலும் இது 6.62-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC அல்லது MediaTek Dimensity 1200 SoC மற்றும் 44W அல்லது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4,500mAh பேட்டரி போன்ற அம்சங்களையம் பேக் செய்யலாம். வி25 சீரிஸின் இந்திய விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை!

Best Mobiles in India

English summary
New Camera Smartphone Vivo V25 Pro India Launch Date August 17

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X