வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!

|

2 கேள்விகளுக்கு ஒரே பதிலை கூற முடியுமா? என்று கேட்டால் - முடியும்!

"ஒரு நல்ல கேமரா மொபைலாக பார்த்து சொல்லுங்களேன்?!" மற்றும் "ஒரு தரமான பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போனாக பார்த்து சொல்லுங்களேன்?!" என்கிற இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்.

அது இன்று (ஆகஸ்ட் 17) இந்தியாவில் அறிமுகமான Vivo (விவோ) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் தான்!

அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Vivo நிறுவனத்தின் அந்த லேட்டஸ்ட் மாடல்!

Vivo நிறுவனத்தின் அந்த லேட்டஸ்ட் மாடல்!

அது விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். இது MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB வரையிலான ரேம் உடன் அனுப்பப்படும் ஒரு "வெயிட்டான" பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

அதே சமயம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் வரும் 64 மெகாபிக்சல் மெயின் சென்சாரை பேக் செய்யும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், "தி பெஸ்ட்" என்று கூறுபடியான 32எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. அதாவது - ஒரு தரமான கேமரா போனாகவும் உள்ளது!

இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!

சிப்செட் மற்றும் கேமராக்கள் மட்டும் தான் வெயிட்டா?

சிப்செட் மற்றும் கேமராக்கள் மட்டும் தான் வெயிட்டா?

இல்லவே இல்லை! இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.56-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது. உடன் Funtouch OS 12 மூலம் இயங்குகிறது. எல்லாவற்றை விடவும் முக்கியமாக இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பேக் செய்கிறது.

டிஸ்பிளே, சிப்செட் பற்றி?

டிஸ்பிளே, சிப்செட் பற்றி?

'கலர் சேஞ்சிங்' (வண்ணத்தை மாற்றும்) பேக் கிளாஸ் பேனலுடன் வரும் Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது Full-HD+ (2,376x1,080 பிக்சல்ஸ்) ரெசல்யூஷனை கொண்ட 6.56-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB வரையிலான ரேம் உடன் இணைந்து இயக்கப்படுகிறது. இதுவொரு டூயல் சிம் ஸ்மார்ட்போனும் ஆகும்.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராக்கள் பற்றி?

முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராக்கள் பற்றி?

கேமராக்களை பொறுத்தவரை, Vivo V25 Pro மாடல் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது.

அதில் f/1.89 லென்ஸ் ற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு கொண்ட 64-மெகாபிக்சல் சென்சார் + f/2.2 லென்ஸ் கொண்ட 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா + f/2.4 லென்ஸ் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது.

முன்பக்கத்தில், Vivo V25 Pro-வில் ஐ ஆட்டோஃபோகஸ் ஆதரவு மற்றும் f/2.45 லென்ஸ் உடன் வரும் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி, பேட்டரி பற்றி?

கனெக்டிவிட்டி, பேட்டரி பற்றி?

டூயல்-பேண்ட் Wi-Fi (2.4GHz மற்றும் 5GHz), ப்ளூடூத் v5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்கும் Vivo V25 Pro-வில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4,830mAh பேட்டரியை கொண்டுள்ளது. Vivo நிறுவனத்தின் கூற்றுப்படி இது 190 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

Vivo V25 Pro-வின் விலை, விற்பனை!

Vivo V25 Pro-வின் விலை, விற்பனை!

இந்தியாவில் Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.35,999 க்கும், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜை கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது ரூ.39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்போது முதல் விற்பனை? என்னென்ன சலுகைகள்?

எப்போது முதல் விற்பனை? என்னென்ன சலுகைகள்?

இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் வழியாகவும், விவோவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற ரீடெயில் சேனல்களின் வழியாகவும் - ப்யூர் பிளாக் மற்றும் சைலிங் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் - வாங்க கிடைக்கும்.

HDFC கிரெடிட் / டெபிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளின் கீழ் Vivo V25 Pro-வை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.3500 என்கிற தள்ளுபடியை பெற முடியும். கூடுதலாக ரூ.3000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.

Best Mobiles in India

English summary
New Camera Smartphone 2022 Vivo V25 Pro Launched India Check Specifications Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X