Home
Mobile

ஐபோனுக்கு அருமையான 3 புதிய கேமரா லென்ஸ்கள் அறிமுகம்!

ஐபோனுக்கு அருமையான 3 புதிய கேமரா லென்ஸ்கள் அறிமுகம்!

ஐபோன் ஸ்மார்ட்போன்கள் சிறப்பான தொழில் நுட்பத்தினை கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஐபோன் மாடல்களுக்கு நவீன தொழில் நுட்பம் கொண்ட லென்ஸ் கிட் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது விடெக் நிறுவனம். சிறப்பான தொழில் நுட்பம் கொண்ட ஐபோனை இன்னும் சிறப்பானதாக்கவே விடெக் நிறுவனம் புதிய வசதிகள் கொண்ட லென்ஸை உருவாக்கி உள்ளது.

இந்த புதிய கேமரா லென்ஸ்களில் கேம்-12109 அலுமினியம் டெலிஃபோட்டோ லென்ஸ், வைடு ரேன்ஞ் மற்றும் மேக்ரோ லென்ஸ், ஃபிஷ் லென்ஸ் என்று 3 விதம் இருக்கிறது. இதில் கேம்-12109 அலுமினியம் ஃபோட்டோ லென்ஸில் 12 X பிக்ஸல் சூமிங் வசதி உள்ளது. இதன் மூலம் துல்லியமான புகைப்படத்தினை பெற முடியும். இந்த லென்ஸில் ஆப்டிக்கல் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. கேம்-12109 அலுமினியம் டெலிபோட்டோ லென்ஸை ரூ.2,800 விலையில் பெற முடியும்.

வைட் ரேன்ஞ் மற்றும் மேக்ரோ லென்ஸ் மூலம் தொலைவில் பரந்து கிடக்கும் காட்சிகளை கூட துல்லியம் கொண்ட புகைப்படமாக ஐபோன் மூலம் எடுக்க முடியும். இந்த லென்ஸ் ரூ.2,000 விலை கொண்டது. மூன்றாவது வகையான ஃபிஷ் ஐ லென்ஸ் புகைப்படத்தினை சிறப்பான துல்லியத்துடன் மேம்படுத்தி கொடுக்கும். இந்த லென்ஸ் ரூ.1,700 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X