எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!

|

விலையை மீறிய அம்சங்களுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் Tecno நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5G மொபைல் ஆக Camon 19 Pro இன்று (ஆகஸ்ட் 10) இந்தியாவில் அறிமுகமானது.

இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இந்த ஸ்மார்ட்போனும் விலையை மீறிய அம்சங்களை கொண்டுள்ளதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

கஸ்டமைஸ்டு 64எம்பி RGBW+ (G+P) கேமராவுடன் வருகிறது!

கஸ்டமைஸ்டு 64எம்பி RGBW+ (G+P) கேமராவுடன் வருகிறது!

கண்டிப்பாக இதுவும் விலையை மீறிய அம்சங்களுடன் தான் வந்துள்ளது. டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் தொழில்துறையின் முதல், கஸ்டமைஸ்டு 64-மெகாபிக்சல் RGBW+ (G+P) சென்சாருடன் வருகிறது.

இந்த சென்சாரில், இருண்ட மற்றும் "நடுக்கம் மிகுந்த" சூழ்நிலைகளில் கூட கூர்மையான மற்றும் நிலையான புகைப்படங்களை பதிவு செய்ய உதவும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் ஹைப்ரிட் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (HIS) உள்ளது.

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

அதுமட்டுமா?

அதுமட்டுமா?

கேமரா டிப்பார்ட்மென்ட்டில் மட்டுமல்ல, டெக்னோ கேமன் 19 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளே, சிப்செட், ரேம், ஸ்டோரேஜ், பேட்டரி என கிட்டத்தட்ட எல்லா பிரிவிலுமே தரமான அம்சங்களை பேக் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.8-இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் மெமரி ஃப்யூஷன் அம்சத்தை பயன்படுத்தி 5ஜிபி வரை ரேம்-ஐ நீட்டிக்கும் ஆதரவு போன்றவைகளையும் வழங்குகிறது.

பெரிய டிஸ்பிளே.. விலைக்கு ஏற்ற ப்ராசஸர்..!

பெரிய டிஸ்பிளே.. விலைக்கு ஏற்ற ப்ராசஸர்..!

டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் Tecno Camon 19 Pro 5G ஆனது Android 12 ஓஎஸ் அடிப்படையிலான HiOS 8.6 மூலம் இயங்குகிறது.

மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.8-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,460 பிக்சல்கள்) LTPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது MediaTek Dimensity 810 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 8GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதன் 8ஜிபி ரேம்-ஐ 13ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!

வெயிட்டான கேமரா.. கம்பெனி இதை நைட் கேமரா என்கிறது!

வெயிட்டான கேமரா.. கம்பெனி இதை நைட் கேமரா என்கிறது!

Tecno Camon 19 Pro 5G ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் மெயின் சென்சார் ஆக கஸ்டம் 64-மெகாபிக்சல் RGBW+ (G+P) கேமரா உள்ளது.

இது 200 சதவீத ஒளியை "உட்கொள்வதாக" கூறப்படுகிறது மற்றும் கூர்மையான புகைப்படங்களை பதிவு செய்ய OIS மற்றும் HIS-யும் பயன்படுத்துகிறது.

இந்த மெயின் கேமராவுடன் 2MP + 2MP என்கிற "தேவை இல்லாத" கேமராக்களும் பேக் செய்யப்பட்டுள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

போதுமான ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி!

போதுமான ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி!

Tecno Camon 19 Pro 5G ஆனது 128GB UFS 2.2 அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை விரிவாக்கலாம்.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஆன்டி-ஆயில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனான 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

"ரகசியத்தை" அம்பலப்படுத்திய Airtel அதிகாரி! அப்புறம் என்ன Jio ரீசார்ஜ் செஞ்சிடுங்க!

Tecno Camon 19 Pro 5G-யின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

Tecno Camon 19 Pro 5G-யின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இந்தியாவில் Tecno Camon Pro 5G ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இது ரூ.25,000 க்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் நினைத்ததை விட மிகவும் குறைவான விலைக்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இது வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் Cedar Green மற்றும் Eco Black என்கிற 2 வண்ண விருப்பங்களின் கீழ் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
New Camera Centric Smartphone Tecno Camon 19 Pro 5G Launched in India Sale Starts From August 12

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X