இனி எல்லாம் ஏஐ மயம்.. Moto AI பட்டன் உடன் 2 புதிய மோட்டோரோலா போன்கள்.. என்ன மாடல்கள்?
மோட்டோரோலா நிறுவனம் கூடிய விரைவில் ரேஸர் 60 மற்றும் ரேஸர் 60 அல்ட்ரா ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த இரண்டு போன்களும் TENAAதளத்தில் தோன்றி, முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தின; குறிப்பாக ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் வரும் என்பதை உறுதிப்படுத்தின.
இப்போது, இந்த இரண்டு போல்டபிள் ஸ்மார்ட்போன்களின் அனைத்து கோணங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. இந்த புகைப்படங்கள் வழியாக ரேஸர் 60 மற்றும் ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ள வால்யூம் ராக்கர் மற்றும் பவர் கீ ஆகியவைகள் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனராகவும் வேலை செய்யும் என்பது போல் தெரிகிறது. இருப்பினும், இடது பக்கத்தில் ஒரு புதிய பட்டன் இருப்பதாகவும் தெரிகிறது; அதன் செயல்பாடு குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை. இது மோட்டோ ஏஐ அசிஸ்டன்ட்-க்காக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
இந்த புதிய பட்டனை தவிர்த்து, ரேஸர் 60 அல்ட்ராவில் உள்ள மற்ற அனைத்தும் அதன் முன்னோடியுடன் பொருந்துகின்றன. கவர் டிஸ்பிளே இரண்டு கேமராக்களை சுற்றி செல்கிறது. இத போல்டபிள் பேனல் 6.9-இன்ச் AMOLED டிஸ்பிளேவை போல் தெரிகிறது. மோட்டோரோலா ரேஸர் 60, மற்றும் ரேஸர் 60 அல்ட்ரா ஆகியவை 18 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இரண்டும் 4,500mAh திறன் கொண்ட பேட்டரி உடன் அனுப்படலாம். ரேஸர் 60 அல்ட்ரா மாடல் ஆனது உயர்மட்ட குவால்காம் சிப்புடன் வரும், ஆனால் ரேஸர் 60 குறைந்த சக்திவாய்ந்த டைமன்சிட்டி சிப் உடன் வரும். ரேஸர் 60 மாடல் ஆனது அமெரிக்காவில் ரேஸர் 2025 என்கிற பெயரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ரேசர் 60 அல்ட்ரா மாடல் ரேஸர் பிளஸ் 2025 என்று அழைக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்து நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை!
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!
சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.


Click it and Unblock the Notifications