Home
Mobile

பட்ஜெட் விலையில் Vivo Y22 ஸ்மார்ட்போன் அறிமுகம்: நம்பி வாங்கலாம்.!

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y22 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

என்ன விலை?

என்ன விலை?

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

விவோ Y22 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

விவோ Y22 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ Y22 ஸ்மார்ட்போன் மாடல்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

இந்த புதிய விவோ போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

விவோ Y22 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS 12 சார்ந்தஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய விவோ Y22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3.5MM ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ Y22 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லிட் ப்ளூ மற்றும் மெட்டாவர்ஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பி வாங்கலாம்

நம்பி வாங்கலாம்

பட்ஜெட் விலையில் 50எம்பி கேமரா,பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில பல அசத்தலான போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Budget Vivo Y22 launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X