Home
Mobile

வாங்குனா இந்த Vivo போன் வாங்கனும்: அப்படியென்ன ஸ்பெஷல்?

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய Vivo Y16 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றிய விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

என்ன விலை?

என்ன விலை?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y16 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ போன். விரைவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கக் கிடைக்கும்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

விவோ Y16 ஸ்மார்ட்போனில் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன் மாடல்.

 சூப்பரான சிப்செட்

சூப்பரான சிப்செட்

விவோ Y16 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

 மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா

13எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதியவிவோ Y16 போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய விவோ Y16 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்றுதான் கூறவேண்டும்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி எல்டிஇ போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Vivo Y16 Launched in India: Specifications, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X