பழைய CD டிசைனில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் அறிமுகமான புதிய Realme 5G போன்!

|

பழைய சிடி (CD) போன்ற பேக் பேனல் டிசைன் - இந்த ஒரு மேட்டருக்காகவே இந்த லேட்டஸ்ட் Realme ஸ்மார்ட்போனை பல பேர் வாங்குவார்கள் என்று ரியல்மி நிறுவனம் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் நாங்கள் அப்படி கூற மாட்டோம்!

கொடுக்குற காசுக்கு வொர்த்-ஆ இருக்கணும்!

கொடுக்குற காசுக்கு வொர்த்-ஆ இருக்கணும்!

எங்களை பொறுத்தவரை, ஒரு ஸ்மார்ட்போன் சும்மா பளபளன்னு இருந்தா மட்டும் போதாது. "கொடுக்குற காசுக்கு 'வொர்த்' ஆன அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்"!

அந்த வகையில் இந்த புதிய Realme ஸ்மார்ட்போன் பலரையும் இம்ப்ரெஸ் செய்கிறது! அதென்ன மாடல்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ முழு விவரங்கள்!

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

புதிதாக அறிமுகமான அந்த Realme மாடல்?

புதிதாக அறிமுகமான அந்த Realme மாடல்?

அது Realme 9i 5G ஸ்மார்ட்போன் ஆகும். ரியல்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது இன்று (ஆகஸ்ட் 18) இந்தியாவில் அறிமுகமானது.

இதுவொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் கூடிய 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC, 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

விலையை மீறிய Dynamic RAM Expansion டெக்னாலஜியும் இதில் உள்ளது!

விலையை மீறிய Dynamic RAM Expansion டெக்னாலஜியும் இதில் உள்ளது!

ஆப் ரெஸ்பான்சிவ்னெஸ்-ஐ (App Responsiveness) மேம்படுத்துவதற்காக இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம்-ஐ (Virtual RAM) வழங்கும் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் தொழில்நுட்பமும் (Dynamic RAM Expansion technology) சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து உங்களால் 5ஜிபி வரையிலான ரேம்-ஐ கடனாக வாங்கி, இதன் ஒட்டுமொத்த ரேம்-இன் அளவை 11 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

என்ன டிஸ்பிளே? என்ன சிப்செட்?

என்ன டிஸ்பிளே? என்ன சிப்செட்?

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட Realme 9i 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த Realme UI 3.0 கொண்டு இயங்குகிறது.

இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 nits ப்ரைட்னஸ்-ஐ வழங்கும் 6.6-இன்ச் அளவிலான Full-HD+ (1,080x2,400) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 5G SoC உடனாக 6GB வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ஒரு போர்ட்ரெய்ட் ஷூட்டர் மற்றும் மேக்ரோ கேமரா உள்ளது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு வரும்போது, இந்த ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் (f/2.0) கேமராவை பேக் செய்கிறது.

ஸ்டோரேஜ், பேட்டரி எல்லாம் எப்படி?

ஸ்டோரேஜ், பேட்டரி எல்லாம் எப்படி?

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் Realme 9i 5G ஆனது 5G, 4G LTE, வைஃபை, ப்ளூடூத் v5.2, GPS/AGPS மற்றும் USB Type-C போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்குகிறது.

மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் Realme 9i 5G ஆனது 18W Quick Charge தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் எடை 187 கிராம் மட்டுமே இருக்கும்.

கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை:

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை:

இந்தியாவில் Realme 9i 5G ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த லேட்டஸ்ட் Realme ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Realme.com வழியாக வாங்க கிடைக்கும்.

அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பரிவர்த்தனைகளில் ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone with CD Like Design Back Panel Realme 9i 5G Launched in India Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X