Home
Mobile

போன் வாங்குற ஐடியா இருந்தா இந்த Vivo 5ஜி மாடலை சூஸ் பண்ணுங்க.! தரமான அம்சங்கள்

விவோ நிறுவனம் புதிய விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

விவோ Y77e 5ஜி

விவோ Y77e 5ஜி

விரைவில் இந்த விவோ Y77e 5ஜி மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் சிப்செட் வசதி

மீடியாடெக் சிப்செட் வசதி

புதிய விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் MediaTek Dimensity 810 சிப்செட் வசதிஉள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி உங்களுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் இந்த போனை வேகமாக இயக்க உதவுகிறதுDimensity 810 சிப்செட்.

மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போன் OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு
1,080x2,408 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.

அசத்தலான கேமரா வசதி

அசத்தலான கேமரா வசதி

புதிய விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலானஸ்மார்ட்போன்.

அதேபோல் HDR, மல்டிலேயர் போர்ட்ரெய்ட், ஸ்லோ-மோஷன், பனோரமா, லைவ் ஃபோட்டோ மற்றும் சூப்பர் நைட் மோட் போன்ற பல கேமரா அம்சங்களுடன்இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 நிறங்கள்

நிறங்கள்

விவோ Y77e 5ஜி போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் பிளாக், கிரிஸ்டல் பவுடர் மற்றும் சம்மர் லிஸ் நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

 என்ன விலை?

என்ன விலை?

5ஜி, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 194 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.20,000) ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Vivo Y77e 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X