Home
Mobile

குறைந்த விலையில் அசத்தலான Vivo Y02s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் புதிய விவோ Y02s ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது.

 விவோ Y02s

விவோ Y02s

அதேசமயம் இந்த விவோ Y02s ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போதுஇந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

விவோ Y02s ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தஸ்மார்ட்போன் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

அதேபோல் புதிய விவோ Y02s ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

 மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

விவோ Y02s ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

சிங்கிள் ரியர் கேமரா

சிங்கிள் ரியர் கேமரா

விவோ Y02s ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமராஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய விவோ Y02s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10W பாஸ்ட்சார்ஜிங் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விவோ Y02s ஸ்மார்ட்போன்.

 என்ன விலை?

என்ன விலை?

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y02s ஸ்மார்ட்போனின் விலை PHP 6,499 (இந்திய மதிப்பில் ரூ.9,250) ஆக உள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Vivo Y02s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X