Home
Mobile

Samsung சம்பவம்.. பட்ஜெட் விலையில் 6GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 50MP கேமரா,5,000mAh பேட்டரி.. என்ன மாடல்?

இந்தியாவில் உள்ள பட்ஜெட்வாசிகளை குறிவைத்து சாம்சங் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 6ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜ், 50எம்பி கேமரா, 500எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் என்ன? இதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை பற்றித்தான். சமீபத்தில், சாம்சங் அதன் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து, சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் கேலக்ஸி ஏ05 மாடலின் ஆதரவு பக்கம் நேரலைக்கு வந்துள்ளது. ஆக இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போவது உறுதியாகியுள்ளது.

பட்ஜெட் விலையில் 6GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 50MP கேமரா, 5000mAh பேட்டரி!

சாம்சங்கின் ஆதரவு பக்கத்தில் SM-A055F/DS என்கிற மாடல் நம்பரி ன்கீழ் காணப்படும் சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் ஆதரவுடன் வரும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ05 ஆனது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப் நாட்ச் உடனே வரும் சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜய் சிப்செட் (MediaTek Helio G85 Chipset) மூலம் இயக்கப்படும் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி நேட்டிவ் ஸ்டோரேஜ் உடன் வரும்.இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்குவதற்கான ஆதரவும் கிடைக்கும்.

பட்ஜெட் விலையில் 6GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 50MP கேமரா, 5000mAh பேட்டரி!

கேமரா செட்டப்பை பொறுத்தவரை, 50எம்பி வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்யலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, டூயல்-சிம் சப்போர்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் இடம்பெறும்.

என்ன விலைக்கு அறிமுகமாகும்? சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் - பிளாக், சில்வர் லைட் க்ரீன் - அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.10000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.9890 க்கு அறிமுகமாகலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி ஏ05ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ், 6.7-இன்ச் FHD+ PLS LCD டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் உடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் 6GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 50MP கேமரா, 5000mAh பேட்டரி!

கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்யும் ஆதரவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் வருகிறது. மேலும் இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

கடைசியாக இது 25வாட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6ஜிபி ரேம் + 128ஜி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது பிளாக், லைட் க்ரீன் மற்றும் லைட் வயலட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Samsung Galaxy A05 Ready To Launch in India Soon Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X