Home
Mobile

இந்தியாவில் அறிமுகமான Samsung கேலக்ஸி ஏ04எஸ் போன்: இவ்வளவு கம்மி விலையா?

சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ்

முதலில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.

எக்ஸிநோஸ் சிப்செட் வசதி

எக்ஸிநோஸ் சிப்செட் வசதி

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். எனவே இது இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டுஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் இந்த போனில் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, அட்மோஸ் ஆடியோ ஆதரவு, கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் எடை 195 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக், காப்பர், கிரீன் போன்ற நிறங்களில்இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை?

விலை?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது. சாம்சங் இணையதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்திஇந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Samsung Galaxy A04s Launched in India: Specs, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X