Home
Mobile

பட்ஜெட் விலையில் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ04 கோர் எனும் ஸ்மார்ட்போனை இந்தயாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ04 கோர்

கேலக்ஸி ஏ04 கோர்

அதேபோல் இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த கேலக்ஸி ஏ04 கோர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி ஏ04 கோர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ04 கோர் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 அல்லது ஹலியோ ஜி37 சிப்செட் வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி ஏ04 கோர் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு
ஸ்லாட் கொடுக்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மேலும் இந்த கேலக்ஸி ஏ04 கோர் ஸ்மார்ட்போனில் எச்டி பிளஸ் Infinity-V டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிங்கிள்ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய கேலக்ஸி ஏ04 கோர்போன் அறிமுகமாகும்.

மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-inch ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்
90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன்  சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை கொண்டுள்ளது. பின்புOne UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்தசாம்சங் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ23 5ஜி கேமரா

கேலக்ஸி ஏ23 5ஜி கேமரா

கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், Geomagnetic சென்சார், கிரிப் சென்சார், விர்ச்சுவல் லைட்டிங் சென்சார் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக இந்த போன் நீலம், வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Samsung Galaxy A04 Core will be launched soon: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X