Home
Mobile

நீ கலக்கு சித்தப்பு.. ரூ.8000 க்கு Realme-யின் புது போன்.. 6GB ரேம், ஆண்ட்ராய்டு 15, 45W சார்ஜிங், 5000mAh!

இம்மாத தொடக்கத்தில் (மே 2025) ரூ.13,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரியல்மி சி75 5ஜி (Realme C75 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த கையோடு, இந்நிறுவனம் இன்னும் மலிவான விலகி இன்னொரு சி-சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதென்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது - ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி சி61 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது யுனிசாக் டி7259 சிப்செட் (Unisoc T7250 SoC), 6ஜிபி ரேம், ரியல்மி யுஐ உடனான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களுடன் கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளதால், இதன் அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது.

நீ கலக்கு சித்தப்பு.. ரூ.8000 க்கு Realme-யின் புது போன்!

ரியல்மி சி71 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இல்லை. அதுகுறித்த விவரங்கள் வரும் ரியல்மி சி75 5ஜிநாட்களில் வெளிப்படுத்தப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, பொதுவாக ரியல்மி சி-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதால் இதுவும் அப்படியே இருக்கலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ரூ.7,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Take a Poll

ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் FHD+ டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 6GB வரை RAM
- 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- 32 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- இராணுவ-தர MIL-STD 810H சான்றிதழ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ்
- 45W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 6000mAh பேட்டரி

இந்தியாவில் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 128GBஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும் வாங்க கிடைக்கிறது. தற்போது இது Flipkart, Realme India e-store மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக Lily White, Midnight Lily மற்றும் Purple Blossom ஆகிய கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இதற்கும் முன்பாக ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது Lightning Purple, Obsidian Black மற்றும் Surf Green கலர்களில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 92.7 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 111 சதவீதம் DCI-P3 வைட் கலர் கேமட் மற்றும் இரவில் கண்களின் அழுத்தத்தை குறைப்பதற்கான TÜV ரீன்லேண்ட் சான்றிதழ் ஆகிய அம்சங்கள் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ அம்சத்தையும், ஏஐ ஆதரவுடன் கூடிய இமேஜிங் டூல்களையும் ஆதரிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-C போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக அளவீடுகளில் இந்த போன் 7.97மிமீ தடிமன் மற்றும் எடையில் 196 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Realme C71 Launching Soon Check Out Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X