சூப்பர் பட்ஜெட் விலையில் பிக் டிஸ்பிளே, கிளாஸ் கேமரா, மாஸ் பேட்டரி! இது போதும்!

|

பெரிய டிஸ்பிளே இருக்கணும், சூப்பரான கேமரா இருக்கணும், கூடவே பெர்ஃபார்மென்ஸ் பிச்சிக்கணும். ஆனால் இது எல்லாமே பட்ஜெட் விலையில் இருக்கணும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள்?

ஆம் என்றால்.. இந்தியாவில் இன்று அறிமுகமான இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் உங்களுக்கானது தான்! என்ன மாடல்? என்ன விலை? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஜி சீரிஸின் கீழ் அறிமுகமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

ஜி சீரிஸின் கீழ் அறிமுகமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் 'ஜி' சீரீஸின் கீழ், லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G32 இன்று (ஆகஸ்ட் 9, 2022) இந்தியாவில் அறிமுகமானது.

இந்த ஸ்மார்ட்போன் அதன் விலையை மீறிய அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.5-இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 SoC, 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் Android 12 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

போதாக்குறைக்கு ஐபி52 மற்றும் திங்க்ஷீல்டு வேற!

போதாக்குறைக்கு ஐபி52 மற்றும் திங்க்ஷீல்டு வேற!

மேற்கண்ட அம்சங்கள் உங்களை இம்ப்ரெஸ் செய்யவில்லை என்றால், மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் அணுக கிடைக்கும் மொபைல்களுக்கான திங்க்ஷீல்டு செக்யூரிட்டி சொல்யூஷன், தூசி & நீர் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீடு, ஸ்போர்ட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு போன்ற அம்சங்கள் உங்களை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்!

Moto G32 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்!

Moto G32 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்!

டூயல் சிம் (நானோ) சப்போர்ட் உடன் வரும் Moto G32 ஆனது நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12-ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

இதன் 6.5-இன்ச் அளவிலான டிஸ்பிளேவானது ஒரு ஃபுல் எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே ஆகும். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடன் வருகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்னாப்டிராகன் 680 SoC உடனாக 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு வரும் போது, Moto G32 ஆனது 50 மெகாபிக்சல் ( f/1.8) மெயின் கேமரா + 8எம்பி (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி (f/2.4) மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ (f/2.4) கேமரா உள்ளது.

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி எல்லாம் எப்படி?

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி எல்லாம் எப்படி?

மோட்டோ ஜி32 ஆனது 64ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, டூயல்-பேண்ட் வைஃபை, 4ஜி LTE, ப்ளூடூத் v5.2, 3.5mm ஹெட்ஃபோன் போர்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்றவைகள் உள்ளன.

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் எல்லாம் எப்படி?

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் எல்லாம் எப்படி?

ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் உடன் வரும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மேலும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டூயல் மைக்ரோஃபோன்களும் உள்ளன.

Moto G32 விலை மற்றும் விற்பனை!

Moto G32 விலை மற்றும் விற்பனை!

இந்தியாவில் Moto G32 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது மினரல் கிரே மற்றும் சாடின் சில்வர் என்கிற 2 வண்ண விருப்பங்களின் கீழ், வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் Flipkart (பிளிப்கார்ட்) மற்றும் முன்னணி ஆஃப்லைன் அவுட்லெட்டுகளின் வழியாக விற்பனை செய்யப்படும்.

அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா?

அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா?

உண்டு! வாடிக்கையாளர்கள் HDFC பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், 10% உடனடி தள்ளுபடியை பெறலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 மதிப்பிலான ஜியோவின் கேஷ்பேக் சலுகை ஒன்றும் அணுக கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் ஆனது ரூ.549 ரீசார்ஜ் + Zee5 சேவையின் ஆண்டு சந்தாவின் மீதான ரூ.2,549 என்கிற தள்ளுபடியாக அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Moto G32 Launched in India Flipkart Sale Date August 16 Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X