Home
Mobile

6.84-இன்ச் டிஸ்பிளே, 6,000mAh பேட்டரியுடன் புதிய Infinix போன் அறிமுகம்: விலை?

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Hot 20 Play எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

இப்போது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும்.

 720x1640பிக்சல்ஸ்

மேலும் 720x1640பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போன் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி மெயின் கேமரா

13எம்பி மெயின் கேமரா

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

 6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Infinix Hot 20 Play Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X