Home
Mobile

கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 12 (Infinix Hot 12) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

எப்போது விற்பனை?

எப்போது விற்பனை?

வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகஇந்த போன் எக்ஸ்ப்ளோரேட்டரி ப்ளூ, போலார் பிளாக், பர்பிள் மற்றும் டர்க்கைஸ் சியான் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 என்ன விலை?

என்ன விலை?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 நிட்ஸ் ப்ரைட்னஸ், Eye Care mode, 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 12 போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. பின்பு XOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ்ஸ்மார்ட்போன்.

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி
கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone Infinix Hot 12 Launched in India: Price, Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X