50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் Samsung கேலக்ஸி ஏ04 போன் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனை மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ04

கேலக்ஸி ஏ04

அதாவது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ03 போனின மேம்பட்ட வெர்ஷன் தான் இந்த கேலக்ஸி ஏ04 மாடல். இப்போது இந்த
சாம்சங் கேலக்ஸி ஏ04 (Samsung Galaxy A04) ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.5,999 முதல் ரூ.10 ஆயிரம் வரை: தரமான எல்இடி டிவி வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!ரூ.5,999 முதல் ரூ.10 ஆயிரம் வரை: தரமான எல்இடி டிவி வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!

இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே

இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன்.

இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!

தரமான பிராசஸர்

தரமான பிராசஸர்

புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் Exynos 850 பிராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட வேகத்தை
கொடுக்கும். அதேபோல் இந்த பிராசஸர் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

4ஜிபி/6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

டாப் டக்கர் ஸ்பெக்ஸ் உடன் வெளிவர ரெடியாகும் Xiaomi 12T Pro.! இதுல 200MP கேமரா இருக்கா?டாப் டக்கர் ஸ்பெக்ஸ் உடன் வெளிவர ரெடியாகும் Xiaomi 12T Pro.! இதுல 200MP கேமரா இருக்கா?

50எம்பி கேமரா

50எம்பி கேமரா

இந்த புதிய சாம்சங் போன் டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.

பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

இப்படியொரு போனுக்காக தான் வெயிட்டிங்: வசீகரமான வடிவமைப்பில் கவர்ந்திழுக்கும் Asus போன்.!இப்படியொரு போனுக்காக தான் வெயிட்டிங்: வசீகரமான வடிவமைப்பில் கவர்ந்திழுக்கும் Asus போன்.!

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரிபேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போன் பிளாக், வைட், கிரீன் மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000 விலைக்குள் Amazon-ல் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.! நம்பி வாங்கலாம்.!ரூ.10,000 விலைக்குள் Amazon-ல் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.! நம்பி வாங்கலாம்.!

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்று கூறப்படுகிறது.

Snapdragon 888+ சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா போன்.!Snapdragon 888+ சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா போன்.!

எப்போது விற்பனை?

எப்போது விற்பனை?

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி ஏ04 போனின் விலை மற்றும் விற்பனைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை சாம்சங் நிறுவனம். இருந்தபோதிலும் இந்த புதிய போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Budget Smartphone 2022 Samsung Galaxy A04 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X