Redmi நோட் 11 எஸ்இ போன் அறிமுகம்: விலையை சொன்னா உடனே வாங்குவீங்க.!
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி நோட் 11 எஸ்இ (Redmi Note 11 SE) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாம் எதிர்பார்த்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

என்ன விலை?
அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் வெள்ளை, கருப்பு, ஊதா மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது விற்பனை?
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பரான டிஸ்பிளே
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% DCI-P3 colour gamut, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட
பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

சிப்செட் எப்படி?
கேமிங் சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் Mali-G76 3EEMC4 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன்.
அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

குவாட் ரியர் கேமரா
புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அருமையான பேட்டரி
புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த ஸமார்ட்போன் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
மேலும் ஹை-ரெஸ் ஆடியோ டூயல்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் டிசைன், இசட்-ஆக்சிஸ் ஹாப்டிக்ஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர்போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி போன்.
அதேபோல் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் எடை 178.8 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications