Home
Mobile

அடேங்கப்பா பட்ஜெட் விலையில் இப்படியொரு Redmi 5G போன் வருதா? காத்திருப்போம்.!

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் இந்நிறுவனம் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி

ரெட்மி 11 பிரைம் 5ஜி

இந்நிலையில் ரெட்மி 11 பிரைம் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் 22041219I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ரெட்மி 5ஜி போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும்
என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். விரைவில் அறிமுகமாகும்
ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

குறிப்பாக இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 1080 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

 தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போனில் மீடியாடெக்Dimensity 700 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த ரெட்மி போன் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

விரைவில் அறிமுகமாகும்ரெட்மி 11 பிரைம் 5ஜி போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன்இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி மெயின் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு18W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

என்ன விலை?

என்ன விலை?

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Redmi 11 Prime 5G Smartphone Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X