Home
Mobile

இந்தியாவில் குறைந்த விலையில் அசத்தலான Realme நார்சோ 50ஐ போன் அறிமுகம்.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இந்த புதிய போன் வரும் செப்டம்பர் 23-ம் தேதிஅமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிறங்கள்

நிறங்கள்

டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் நிறங்களில் இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

400 நிட்ஸ் ப்ரைட்னஸ்

400 நிட்ஸ் ப்ரைட்னஸ்

6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ கோர் பிராஸசர்

ஆக்டோ கோர் பிராஸசர்

ஆக்டோ கோர் Unisoc T612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆதரவு உள்ளது.

 8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

  5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த போனின் எடை 182 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Realme Narzo 50i Prime Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X