Home
Mobile

Poco M4 5G போனின் அறிமுக தேதி அறிவிப்பு: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

போக்கோ நிறுவனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது போக்கோ எம்4 5ஜி போனின் அறிமுக தேதியை தற்போது வெளியிட்டுள்ளது போக்கோ நிறுவனம்.

 எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

போக்கோ நிறுவனத்தின் டிவிட்டர் தளத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 11.30-க்கு சர்வதேச சந்தைகளில் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வை நேரடியாக பார்க்க முடியும். மேலும் ஆன்லைனில் கசிந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

புதிய போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

புதிய போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிக எதிர்பார்த்த ஆக்டோ மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது.எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போனின் உதவியுடன் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி
பயன்படுத்த முடியும்.

மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது
குறிப்பிடத்தக்கது.

 டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

இந்த புதிய போக்கோ போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இருக்கும்.

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி

புதிய போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 என்ன விலை?

என்ன விலை?

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New budget Poco M4 5G smartphone to launch on August 15: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X