அட்றா சக்கை.. பட்ஜெட் விலையில் இப்படி ஒரு Pro மாடலா? கலகலக்கும் இந்திய மொபைல் மார்க்கெட்!
பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக்கை வழங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு, இந்தியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது. அதை நன்கு அறிந்த சீன மொபைல் நிறுவனமொன்று தனது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை, இன்று (அதாவது பிப்ரவரி 16 ஆம் தேதி) இந்திய சந்தையில் களமிறக்குகிறது!
நாம் இங்கே பேசுவது டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno Pop 7 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஏற்கனவே ஆப்பிரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதால், இதன் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை!

Tecno Pop 7 Pro வில் அப்படி என்ன ஸ்பெஷல்?
மேலோட்டமாக பார்க்கும் எவருக்குமே டெக்னோ பாப் 7 ப்ரோவை ஒரு பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஏனென்றால் இது 6.6-இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே, குவாட்-கோர் சிப்செட், 4ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சமாக 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 13-மெகாபிக்சல் ஏஐ டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது!
Tecno Pop 7 Pro வின் விரிவான அம்சங்கள்
இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ பாப் 7 ப்ரோவின் அம்சங்கள் நைஜீரிய வேரியண்ட் உடன் ஒற்றுப்போகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது இது, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்புடன் 6.6-இன்ச் அளவிலான எச்டி+ (720x1,612 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
இது 4ஜிபி வரையிலான ரேம் மற்றும் 64ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் குவாட் கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்டென்டட் ரேம் 2.0 என்கிற அம்சமும் உள்ளது. இதன் கீழ் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 7ஜிபி வரையிலான ரேம்-ஐ "கடன்" வாங்கிக்கொள்ள முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ஃபிளாஷை பேக் செய்யும் 13 மெகாபிக்சல் ஏஐ டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை இதில் உள்ள 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பார்த்துக்கொள்ளும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஓடிஜி ஆகியவைகளை வழங்கும். இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது, கூடவே பேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது. கடைசியாக, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ன் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி கேப்பாசிட்டி 5,000mAh ஆகும்.
Tecno Pop 7 Pro வின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?
டெக்னோ பாப் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் நைஜீரிய வேரியண்ட், இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.11,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். அதாவது இது ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.
மேலும் நைஜீரிய வேரியண்ட்டை போலவே எண்ட்லெஸ் பிளாக், நெபுலா பர்பில் மற்றும் யுயுனி ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் இந்திய சந்தையில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications