அப்படியே அள்ளி போடுங்க.. வெறும் ரூ.9999 க்கு 12GB டைனமிக் ரேம், 108MP கேமரா, 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?
எதிர்பார்த்ததை விட குறைவான விலைக்கு அறிமுகமாகி, பட்ஜெட்வாசிகளை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது ரியல்மி சி53 (Realme C53) ஸ்மார்ட்போன். இது ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வெறும் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ரியல்மி சி53 ஆனது 108எம்பி மெயின் கேமரா, 12ஜிபி டைனமிக் ரேம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது. இது வேறு என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? அறிமுகம் சலுகைகள் உண்டா? இதோ விவரங்கள்:

ரூ.9,999 என்பது ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இதேஹ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட்டிலும் வெளியாகியுள்ளது. அதன் விலை ரூ.10,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்பியன் கோல்ட் மற்றும் சாம்பியன் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
விற்பனையை பொறுத்தவரை, ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 26 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ரியல்மி.காம் (realme.com), பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும்.
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை. ரியல்மியின் பேஸிக் (4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்) வேரியண்ட் மீது எந்த சலுகையும் இல்லை. ஏனென்றால், அதன் விலை ஏற்கனவே எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது. ஆனால் 6ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் மீது ரூ.1,000 வரையிலான தள்ளுபடி கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்சங்களை பற்றி பேசுகையில், ரியல்மி சி53 ஸ்மார்ட்போனானது 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. யுனிசாக் டி612 (UNISOC T612) சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி டைனமிக் ரேமும் உள்ளது; இது மல்டி-டாஸ்கிங்கையும், ஆப்களை சீராக இயக்கவும் உதவும்.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி சி53-யில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 108எம்பி மெயின் கேமரா + ஒரு பி&டபுள்யூ லென்ஸை (B&W Lens) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ டி (Realme UI T) வெர்ஷனில் இயங்குகிறது.
ரியல்மி சி53 ஸ்மார்ட்போனானது ஒரு பெரிய 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் போதுமான சக்தியை வழங்கும். கூடுதலாக இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.0, வைஃபை, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ரியல்மி சி53 ஆனது ஹை-ரெசல்யூஷன் கேமரா, ஸ்மூத் ஆன டிஸ்பிளே, நீண்ட நேர பேட்டரி லைஃப் மற்றும் பெரிய ஸ்டோரேஜை வழங்கும் ஒரு ஃபியூச்சர்-பேக்டு (Feature-packed) ஸ்மார்ட்போன் ஆகும். குறிப்பாக இதன் விலையை கருத்தில் கொண்டால் - கொடுக்கும் பணத்திற்கு மீறிய மதிப்பை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்!


Click it and Unblock the Notifications








