Home
Mobile

5,000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: என்ன விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

 விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். அதேபோல் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

புதிய ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,612x720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்மாடல்.

 அசத்தலான சிப்செட் வசதி

அசத்தலான சிப்செட் வசதி

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியொடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

 மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

புதிய ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி
கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

 13எம்பி கேமரா

13எம்பி கேமரா

ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்மாடல்.

அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

மேலும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர கைரேகை சென்சார் வசதியும் இதில் உள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இந்த ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 4ஜி, வைஃபை, புளூடூத் வி5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Oppo A57e Smartphone Launched in India Launched: Specs, Price Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X