இந்தியாவில் அறிமுகமான Oppo A17 போன்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ17 (Oppo A17) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அருமையான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மர்ரட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

என்ன விலை?
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.

டிஸ்பிளே எப்படி?
புதிய ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான சிப்செட் வசதி
ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அருமையாக உள்ளது.

64ஜிபி ஸ்டோரேஜ்
ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான கேமரா
ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.
அதிர்ந்து போன வானம்.. விண்கல் மோதலில் நடந்தது என்ன? வியக்க வைத்த James Webb உண்மை!

தரமான பேட்டரி
புதிய ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்எச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒரே ஒரு குறை
அதாவது இந்த போனில் அனைத்து அம்சங்களுமே மிக அருமையாகத் தான் உள்ளது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. தற்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 5ஜி போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன்.
அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட்
விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








