Home
Mobile

குறைந்த விலையில் Moto E22 மற்றும் Moto E22i போன்கள் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய Moto E22 மற்றும் Moto E22i ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அசத்தலான வடிவமைப்புடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன.

விற்பனை விவரம்

விற்பனை விவரம்

மோட்டோ இ22 மற்றும் மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போன்கள் முதலில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விலை

என்ன விலை

மோட்டோ இ22 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை EUR 139.99 (இந்திய மதிப்பில் ரூ.11,150)-ஆக உள்ளது. அதேபோல் மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போனின் விலை EUR 129.99(இந்திய மதிப்பில் ரூ.10,300) ஆக உள்ளது.

குறிப்பாக Astro Black மற்றும் Crystal Blue நிறங்களில் வெளிவந்துள்ளது மோட்டோ இ22 போன். பின்பு Graphite Grey மற்றும் Winter White நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போன்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

மோட்டோ இ22 மற்றும் மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போன்கள் 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.

சூப்பரான சிப்செட் வசதி

சூப்பரான சிப்செட் வசதி

மோட்டோ இ22 மற்றும் மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோ இ22 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தை கெண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டால்பி அட்மோஸ்

டால்பி அட்மோஸ்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் டால்பி அட்மோஸ் உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளன இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

மோட்டோ இ22 மற்றும் மோட்டோ இ22ஐ ஸ்மார்ட்போன்கள் 16எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளன இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.

4020 எம்ஏஎச் பேட்டரி

4020 எம்ஏஎச் பேட்டரி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு மோட்டோ போன்களும் 4020 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளன. பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள்.குறிப்பாக இந்த இரண்டு போன்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Moto E22, Moto E22i Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X