வியக்கவைக்கும் விலையில் அறிமுகமான Asus ZenFone 9: அப்படி என்னதான் இதில் ஸ்பெஷல்.!

|

ஆசஸ் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய ஆசஸ் ஜென்போன் 9 எனும் ஸ்மார்ட்போனை தைவானில் அறிமுகம் செய்துள்ளது.

ஆசஸ் ஜென்போன் 9

ஆசஸ் ஜென்போன் 9

விரைவில் இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 மாடல் ஆனது அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த
ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிறந்த திட்டம் இதுதான்- ஜியோ தான் மாஸ்: 84 நாட்கள் வேலிடிட்டி உடன் சிறந்த பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்!சிறந்த திட்டம் இதுதான்- ஜியோ தான் மாஸ்: 84 நாட்கள் வேலிடிட்டி உடன் சிறந்த பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஆசஸ் ஜென்போன் 9 விலை

ஆசஸ் ஜென்போன் 9 விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆசஸ் ஜென்போன் 9 போனின் விலை EUR 799 (இந்திய மதிப்பில் ரூ.64,800-ஆக உள்ளது). அதேபோல் மிட்நைட் பிளாக், மூன்லைட் ஒயிட், சன்செட் ரெட் மற்றும் ஸ்டார்ரி ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்

மக்கள் மிகவும் எதிர்பார்த்த சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன். அதாவது இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு அருமையாகஇருக்கும்.

குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்றவைகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

இதுதவிர Adreno 730 GPU ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன்.

84 நாட்களுக்கு பெஸ்ட் திட்டம் இது தான்.. விலையோ பட்ஜெட்டிற்குள்.. நன்மைகளோ டாப்பில்.. எது உங்களுக்கு வேண்டும்?84 நாட்களுக்கு பெஸ்ட் திட்டம் இது தான்.. விலையோ பட்ஜெட்டிற்குள்.. நன்மைகளோ டாப்பில்.. எது உங்களுக்கு வேண்டும்?

சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட டிஸ்பிளே

சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட டிஸ்பிளே

புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. சிறிய டிஸ்பிளே என்பதால் கையில் பிடித்து பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர டிஸ்பிளேவுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்கும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆதரவும் இதில் உள்ளது.

சுவற்றில் ஒட்டியது போல் இருக்கும்- ரூ.12,999-க்கு தூக்கலான காட்சி, டிடிஎஸ் உடன் வியூ ப்ரீமியம் ஸ்மார்ட்டிவி!சுவற்றில் ஒட்டியது போல் இருக்கும்- ரூ.12,999-க்கு தூக்கலான காட்சி, டிடிஎஸ் உடன் வியூ ப்ரீமியம் ஸ்மார்ட்டிவி!

தரமான கேமரா வசதி

தரமான கேமரா வசதி

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமரா six-axis gimbal stabiliser ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே நீங்கள் நினைத்த புகைப்படங்களை அப்படியே எடுக்க முடியும்.

அதாவது இதுபோன்ற சூப்பரான வசதி இருப்பதால் மக்கள் கண்டிப்பாக இந்த போனை வாங்குவார்கள். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன்.

இதுதவிர ஸ்லோ மோஷன், லைட் டிரெயில், பனோரமா, நைட் ஃபோட்டோகிராபி மற்றும் டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற சிறப்பான அம்சங்களைவழங்குகிறது இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன் மாடல்.

நிலாவுக்கு ஆபத்தா?- கட்டுப்பாட்டை இழந்த எலான் மஸ்க் ராக்கெட்., மார்ச் மாதம் நிலவில் மோதி வெடிக்கும் அபாயம்!நிலாவுக்கு ஆபத்தா?- கட்டுப்பாட்டை இழந்த எலான் மஸ்க் ராக்கெட்., மார்ச் மாதம் நிலவில் மோதி வெடிக்கும் அபாயம்!

16ஜிபி ரேம்

16ஜிபி ரேம்

புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல்.

மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு: இனி யாரும் தெரியாமல் ஸ்கிரீன்ஷாட் எடுக்காதீர்கள்.. நாங்க சொல்லிடுவோம்..மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு: இனி யாரும் தெரியாமல் ஸ்கிரீன்ஷாட் எடுக்காதீர்கள்.. நாங்க சொல்லிடுவோம்..

அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை
சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

எனவே இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாகநிறுவனம் கூறுகிறது.

வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டூயல் மைக்ரோபோன், OZO Audio Noise Reduction தொழில்நுட்பம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த அசத்தலான ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி கேமராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி கேமராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 169 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன் முதலில் தைவானில் விற்பனைக்கு வரும். அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Asus ZenFone 9 Launched Check Price Specifications Sale Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X