Home
Mobile

இந்த ASUS போனை பார்த்தீங்களா? இதுக்காக ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணீட்டு இருக்காங்க! அப்படி என்ன ஸ்பெஷல்.!

ஆசஸ் நிறுவனம் தற்போது தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகிறது. அதேபோல் தரமான வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதி என அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுதான் ஆசஸ் போன்கள் வெளிவருகின்றன. குறிப்பாக சியோமி போன்களை விட ஆசஸ் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் ஆசஸ் நிறுவனம் வரும் ஜூன் 29-ம் தேதி புதிய ஆசஸ் ஆசஸ் ஜென்போன் 10 மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த ASUS போனை பார்த்தீங்களா? இதுக்காக ஏகப்பட்ட பேர் வெயிட்டிங்.!

ஆசஸ் ஜென்போன் 10 மாடல் ஆனது 5.9-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 1080 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதாவது கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

விரைவில் அறிமுகமாகும் ASUS Zenfone 10 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கும் இந்த சிப்செட் மிக அருமையாகப் பயன்படும்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய ஆசஸ் ஜென்போன் 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

கேமரா திறன்களைப் பொறுத்தவரை, Asus Zenfone 10 ஆனது சாத்தியமான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் ஈர்க்கக்கூடிய 200MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 மதிப்பீட்டைக் கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ASUS போனை பார்த்தீங்களா? இதுக்காக ஏகப்பட்ட பேர் வெயிட்டிங்.!

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புத்தம் புதிய ஆசஸ் ஜென்போன் 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த போனின் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆசஸ் ஜென்போன் 10 மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த போன் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஆசஸ் ஜென்போன் 10 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 10 மாடல் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
New ASUS Zenfone 10 will be launched on June 29: Check Specifications And Colours And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X