புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்: சாம்சங் திட்டம்

சாம்சங் நிறுவனம் படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஆகவே இந்த ஸ்மார்ட்மொபைல் நிச்சயம் அதிக வசதி கொண்டதாக இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் மொபைல்களில் கொடுக்க இருக்கும் வசதிகளைப் பற்றி எந்த ஒரு தகவல்களையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்த மொபைலின் பெயரைக் கூட இன்னும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறது சாம்சங் நிறுவனம்.
அதனால் இந்திய சிந்தையில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு மொபைல்கள் பற்றி அதிக எதிர் பார்ப்பு நிலவுகிறது. சாம்சங் நிறுவனம் படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மேம்படுத்தும் முயற்சிலும் உள்ளது.
ஆப்பிள் ஐபோன்-4எஸ் மொபைல் வாடிக்கையாளர்களிடையே எக்கச்சக்கமான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே போலொரு சாதனையை சாம்சங் மொபைலும் நிகழ்த்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சாம்சங் வாடிக்கையாளர்கள் இதன் புதிய ஆன்ட்ராய்டு மொபைல்களை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனைப் பற்றி அதிக தகவல்களைத் தெரிந்து கொள்ள இன்னும் சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications