ரூ.10,600 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? தட்டித்தூக்கும் புதிய HTC ஸ்மார்ட்போன்!
பிரபலமான எச்டிசி நிறுவனம் புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கம்மி விலையில்
அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன்
புதிய HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரஷ்யாவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் எம்டி6739 சிப்செட்
HTC Wildfire E Plus ஆனது குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 சிப்செட் உடன் 1.5ஜிகாஹெர்ட் கார்டெக்ஸ்-ஏ53 ஜிபியு மற்றும் பவர்விஆர் ஜிஇ8100 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. கண்டிப்பாக இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல்இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு
HTC Wildfire E Plus ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா
HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் மாடல்.

5150 எம்ஏஎச் பேட்டரி
HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் 5150 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
டூயல்-சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை 8011, புளூடூத் 4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

HTC Wildfire E Plus விலை?
இந்த அசத்தலான HTC Wildfire E Plus ஸ்மார்ட்போனின் விலை $129 (இந்திய மதிப்பில் ரூ.10,600) ஆக உள்ளது. ஆனால் இந்த போன் இந்தியாவில் ரூ.9,999-க்குள் கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சாதனம் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications