Home
Mobile

இப்போ இல்லாட்டி எப்போ.. ரூ.7000 கம்மி விலையில்.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட Samsung 5G போன்!

50எம்பி குவாட் ரியர் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6 -இன்ச் ஃபுல் எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட சாம்சங்கின் பிரபலமான 5ஜி போனின் மீது முழுதாக ரூ.7000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் இங்கே பேசுவது - சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக.. இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.7000 கம்மி விலையில் 5000mAh பேட்டரி கொண்ட Samsung 5G போன்!

6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜை கொண்ட கேலக்ஸி ஏ23 5ஜி மாடலானது அசல் விலையான ரூ.28,999 க்கு பதிலாக 24%என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸையும் நீங்கள் பயன்படுத்தினால் இந்த போனின் இறுதி விலையை இன்னும் குறைக்க முடியும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் வாஙகினால் ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும்.எக்ஸ்சேஞ்ச் போனஸை பொறுத்தவரை ரூ.20,850 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

இதற்காக நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யவேண்டி இருக்கும். மேலும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது நீங்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

எக்ஸ்சேன்ஜ் ஆக கொடுக்கும் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் விரிசல் ஏதும் இல்லை மற்றும் சரியாக அது நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். அதுமட்டுமின்றி, உங்க பகுதியில் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் கிடைக்கிறதா இல்லையா என்பதை உங்கள் பின் கோட்-ஐ (அமேசான் தளத்தில்) உள்ளிட்டு சரிபார்த்துக்கொள்ளவும்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான எட்ஜ்-டு-எட்ஜ் 6.6-இன்ச் எஃப்எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (எஸ்எம்6375) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது.அதில் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதுதவிர்த்து, நீண்ட பேட்டரி லைஃபை உறுதிசெய்யும் சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியும் இதில் உள்ளது, அது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி போனை நம்பி வாங்கலாமா? நிறைகளை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, அம்சங்கள் நிறையாக சாஃப்ட்வேர், 3.5மிமீ ஆடியோஜாக், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் போன்றவைகளை கூறலாம். குறைகளை பொறுத்தவரை எல்சிடி டிஸ்பிளே, ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இல்லை, சுமாரான கேமரா ஓஐஎஸ் போன்றவைகளை கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Amazon Mobile Offer Samsung Galaxy A23 5G Available to Buy Under Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X