Home
Mobile

ரூ.8000 நேரடி டிஸ்கவுண்ட்.. 16GB ரேம், 6500mAh பேட்டரி, 120W சார்ஜிங், SONY கேமரா கொண்ட இந்த Realme போன் மீது!

ரியல்மி நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் தான் அதன் ரியல்மி ஜிடி 7 சீரீஸை அப்டேட் செய்தது. இந்நிறுவனம் ரியல்மி ஜிடி 7 (Realme GT 7), ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) மற்றும் ரியல்மி ஜிடி 7 ட்ரீம் எடிஷன் (Realme GT 7 Dream Edition) ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது

ரியல்மி ஜிடி 7 சீரிஸின் கீழ் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில், அமேசான் இந்தியா வளைத்தளம் ஆனது முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) மாடல் மீது மிகப்பெரிய ரூ.8000 கூப்பன் தள்ளுபடியை வழங்குகிறது. இதன் தள்ளுபடியின் கீழ் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.54,998 க்க பதிலாக ரூ.46,998 என்கிற ஆபர் விலையில் வாங்க முடியும்.

ரூ.8000 நேரடி டிஸ்கவுண்ட்.. இந்த Realme போன் மீது!

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா வழங்கும் ரூ.8000 கூப்பன் தள்ளுபடியுடன் சேர்த்து வங்கி தள்ளுபடிகளையும் பெறலாம். ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலுக்கு மட்டுமல்ல, பின்வரும் பிற ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது: ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro), ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ (Realme Buds Air 7 Pro), ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G) மற்றும் ரியல்மி நார்சோ 80எக்ஸ் (Realme Narzo 80x).

சமீபத்தில் இந்நிறுவனம் அதன் ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ (Realme Buds Air 7 Pro) இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. கேஸுடன் சேர்த்து, ஒரே சார்ஜில் 48 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக கூறப்படும் இந்த இயர்பட்ஸ் ஆனது 45ms வரையிலான லோ லேட்டன்சி மோட்-ஐயும் ஆதரிக்கின்றன. மேலும் இது AI லைவ் டிரான்ஸ்லேட்டர், ஃபேஸ் டு ஃபேஸ் டிரான்ஸ்லேட்டர் மற்றும் AI இன்குவைரி AI அம்சங்களுக்கான ஆதரவுடன் வருகிறது.

இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் விலை ரூ.5,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பையரி க்ரே, க்ளோரி பீய்ஜி, மெட்டாலிக் க்ரே மற்றும் ரேஸிங் க்ரீன் 4 ஆகிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரியல்மி அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது

ரியல்மி ஜிடி 7 ப்ரோ மீதான ஆபர் ஒருபக்கம் இருக்க ரியல்மி நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் இதுவரை அறிமுகம் செய்திராத அளவிலான மிகவும் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோவை (Realme GT 8 Pro) அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட், 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் உடனான ஒரு பிளாட் OLED பேனலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் முந்தைய தலைமுறை மாடல் ஆனது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் மைக்ரோ-குவாட்-கர்வ்டு OLED பேனலை கொண்டிருந்தது. ஆக இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

மேலும் அதன் முன்னோடியை போலவே, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் நீர்ப்புகாத பாடியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 100W சார்ஜிங்குடன் சுமார் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.60000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
New Amazon India Mobile Offer Rs 8000 Coupon Discount on Realme GT 7 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X