OnePlus 13 அறிமுகத்திற்கு முன்னால்.. OnePlus 12 போனில் தரமான வேலைப்பாடு.. இறங்கியது AI அம்சங்கள்!
ஒன்பிளஸ் ரசிகர்கள் அனைவரும் 2025 ஜனவரி 7 ஆம் தேதிக்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏனென்றால் அன்றுதான் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுவே டபுள் டமாக்காவாக இருக்கும் நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் நிறுவனம் இன்னொரு வேலையையும் பார்த்துள்ளது!
ஒன்பிளஸ் 13 அறிமுகம் நடக்க இன்னும் சில நாட்ளே இருக்கும் நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனிற்கான புதிய அப்டேட்டை (New Update) வெளியிட்டுள்ளது. அது ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.0.404 அப்டேட் (OxygenOS 15.0.0.404 Update) ஆகும். இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு புதிய ஏஐ அம்சங்கள் (New AI Features), கேமரா அப்டேட்கள் (Camera Updates) மற்றும் சிஸ்டம் அப்டேட்களை (System Updates) கொண்டுவந்துள்ளது.

கூடவே செக்யூரிட்டி பேட்ச்சும் (Security Patch) அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள ஏஐ அம்சங்களில் - ஏஐ ரிப்ளை (AI Reply), ஏஐ செக் (AI Check) மற்றும் ஏஐ ரீரைட் (AI Rewrite) ஆகியவைகள் அடங்கும். ஏஐ ரிப்ளை அம்சம் வழியாக ஒரு சாட் சூழலின் அடிப்படையில் பயனர்கள் வெவ்வேறு பரிந்துரைக்கப்பட்ட பதில்களில் இருந்து தங்களுக்கான தேர்வை செய்யலாம்.
ஏஐ ரிப்ளை - உங்கள் நேரத்தை சேமிப்பதையும், உரையாடலை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பதையும் உறுதி செய்யும். அடுத்ததாக உள்ள ஏஐ செக் ஆனது இலக்கணம், நிறுத்தற்குறிகள் மற்றும் எழுத்துப்பிழைகளை சரிசெய்வதற்கும், எழுத்துப்பிழைகளை தவிர்ப்பதற்கும் உதவும். கடைசியாக உள்ள ஏஐ ரீரைட் அம்சமானது பயனர்கள் தங்கள் உரையை நீளமாக நீட்டி அல்லது சுருக்கி அல்லது எழுதும் தொனி/பாணியை மாற்ற அனுமதிக்கும்.
ஒன்பிளஸ் 12-க்கு வந்துள்ள இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் வழியாக வேறு என்னென்ன கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இதில் கேமரா அப்டேட்கள் உள்ளன. இப்போது, போட்டோ மற்றும் போர்ட்ரெய்ட் மோட்களில் (Photo and portrait modes) கிடைக்கும் ஃப்ரெஷ் (Fresh), கிளியர் (Clear) மற்றும் எமரால்டு (Emerald) உள்ளிட்ட புதிய பில்டர்கள் (New Filters) கிடைக்கும். இதனுடன் புதிய கஸ்டம் வாட்டர்மார்க் அம்சமும் (Custom Watrmark Feature) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதோடு புதுப்பிக்கப்பட்ட கேலெண்டர் ஆப் (Updated Calender App) மூலம், இப்போது பயனர்கள் ஆண்டுவிழாக்கள், பிறந்தநாள்கள், கவுண்டவுன்கள் மற்றும் பலவற்றைக் கண்காணிப்பதற்கான புதிய விட்ஜெட்களை தேர்வு செய்ய முடியும். சிஸ்டம் அப்டேட்களை பொறுத்தவரை, இப்போது லைவ் அலெர்ட்ஸ் (Live Alerts) ஆனது பிளாஷ் லைட் மற்றும் சார்ஜிங் தகவலை (Flashlight and charging information) காண்பிக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 12 க்கான இந்த அப்டேட்டில் டிசம்பர் 2024 செக்யூரிட்டி பேட்ச்சும் அடக்கம்.
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி அன்று ஒரு சர்வதேச வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது அதில் உலகளாவிய சந்தைகளுக்கான ஒன்பிளஸ் 13 அறிமுகம் செய்யப்படவுள்ளது. கூடவே ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும்.
ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் 13 ஆனது ரூ.65,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








