Home
Mobile

ஓல்ட் மாடல்.. இனி எதுக்கு? வெறும் ரூ.16,500 கேப்புல.. பீஸ்ட் மோடில் புது iPhone.. ஆப்பிள் ஆட்டம் ஆரம்பம்!

இந்த 2023 ஆம் ஆண்டில், உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் சீரீஸ் என்றால், அது நிச்சயமாக ஆப்பிளின் ஐபோன் 15 சீரீஸாகத்தான் (Apple iPhone 15 Series) இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும்படி ஒரு அட்டகாசமான தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், ஐபோன் 15 சீரீஸில் மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்கும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆனது 7க்கும் மேற்பட்ட மேம்படுத்தல்களை பெறவுள்ளதாம். ஐபோன்களை பொறுத்தவரை, ஆண்டுக்கு ஒரு அப்கிரேட் கிடைப்பதே அரிதான விஷயம்!

வெறும் ரூ.16,500 கேப்புல.. பீஸ்ட் மோடில் புது iPhone!

இதற்கிடையில் ஒரே நேரத்தில் 7க்கும் மேற்பட்ட மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்றால்.. அதுவும் வெறும் ரூ.16,500 என்கிற விலை வித்தியாசத்தில் கிடைக்குமென்றால்.. உண்மையிலேயே இது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு அதிரடி நடவடிக்கை தான். அதென்ன மேம்படுத்தல்கள்? ரூ.16,500 வித்தியாசம் என்றால்.. அது என்ன கணக்கு? இதோ விவரங்கள்:

01. கஸ்டமைசபிள் ஆக்ஷன் பட்டன்: ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் தனிப்பயனாக்கக்கூடிய ஆக்ஷன் பட்டன் இடம்பெறலாம். இந்த பட்டன் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐபோன் மாடலிலும் இடம்பெறும் ரிங்/சைலண்ட் சுவிட்சை இடம் மாற்றும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் நாம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் பார்த்ததைப் போலவே இருக்கும்.

02. யூஎஸ்பி டைப் சி போர்ட்: ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐபோன் 15 சீரீஸிலுமே ஆப்பிளின் லைட்டிங் போர்ட் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன்களில் நாம் காணும் யூஎஸ்பி டைப் சி போர்ட் சேர்க்கப்படவுள்ளது

03. இதுவரை இல்லாத மெல்லிய பெஸல்கள்: ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸையும் சிறந்த கன்டென்ட் வியூயிங் எக்ஸ்பீரியன்ஸையும் வழங்கும் நோக்கத்தின் கீழ் இதுவரை இல்லாத அளவிலான மிகவும் மெல்லிய பெஸல்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2023இல் வெளியாகும் அனைத்து ஐபோன்களிலுமே டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

04. பெரிஸ்கோப் லென்ஸ்: ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் இடம்பெறும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் மிக முக்கியமானதொரு கேமரா மாட்யூல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒரு புதிய பெரிஸ்கோப் லென்ஸ் ஆக இருக்கலாம் என்று பெரிதும் ஊகிக்கப்படுகிறது. இது மற்ற சென்சார்களுடன் இணைந்து 5 முதல் 6எக்ஸ் வரையிலான ஆப்டிகல் ஜூமை வழங்கலாம்.

05. 1டிபி வரை ஸ்டோரேஜ்: ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 06. பெரிய பேட்டரி: கூடுதலாக, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பழைய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் காணப்படும் 4323எம்ஏஎச்-ஐ விட சற்றே பெரிய 4852எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

07. புதிய பயோனிக் ஏ17 சிப்செட்: கடைசியாக ப்ரோ மேக்ஸ் மாடலானது ஆப்பிளின் சமீபத்திய பயோனிக் ஏ17 சிப்செட்டை பேக் செய்யும் என்பதில் சந்தேக வேண்டாம். இதுதவிர்த்து, 2023 ஐபோன் மாடல்கள் ஆனது லேட்டஸ்ட் ஐஓஎஸ் 17 உடன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இவை எழலாம் சேர்ந்து தான், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை மிகவும் விலை உயர்ந்த மாடலாக மாற்றுகிறது.

ரூ.16,500 வித்தியாசம் என்றால்.. அது என்ன கணக்கு? பழைய ஐபோன் 14 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது, ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை நிர்ணயமானது சுமார் 200 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.16,490 அதிகமாக இருக்கும்.

அதாவது ரூ.16500 என்கிற விலை வித்தியாசத்தில், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் இல்லாத 7க்கும் மேற்பட்ட முக்கிய மேம்பாடுகள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் வழியாக கிடைக்கும் என்று அர்த்தம். வெளியீட்டை பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஆனது வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் ; அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Photo Courtesy: Hans Twitter Page/ @Hanstsaiz

More from GizBot

Best Mobiles in India

English summary
New Action Button USB Type C Periscope Lens Bigger Battery iPhone 15 Pro Max to Get Major Upgrades
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X