ஆல் இந்தியன்ஸ் ஆர்டர் தெறிக்கட்டும்.. ரூ.12,999 க்கு 5ஜி, 16GB ரேம், 1TB மெமரி, 48MP கேமரா, 5000mAh பேட்டரி!
டெக்னோ (Tecno) நிறுவனமானது என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன்களை (Entry Level 5G Smartphone) வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு முடிவோடுதான் இருக்கிறது போல! இம்மாத தொடக்கத்தில் அதன் டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் ஆப்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது
தற்போது அதன் மற்றொரு என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆன டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (Tecno Spark 30C 5G) ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் 2024 இல் இந்தியாவில் அறிமுகமானது.

அந்த நேரத்தில் இது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என்கிற இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே அறிமுகமானது. தற்போது புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை பெற்றுள்ளது. அறிமுகமான வேகத்தில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கும் வந்துள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் முறையே ரூ.9,998 மற்றும் ரூ.10,498 க்கு பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் 10 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த புதிய வேரியண்ட் 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் வருகிறது என்பதால் இந்த வேரியண்ட்டின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும். இது மிட்நைட் ஷேடோ, அரோரா ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் HD LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி விர்ச்சுவல் ரேம் வழியாக 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜை வழங்கும்
கேமராக்களை பொறுத்தவரை இது LED ஃபிளாஷ் யூனிட் உடனான 48-மெகாபிக்சல் சோனி IMX582 ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. டால்பி அட்மாஸ் ஆதரவு உடனான இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. அது 18W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
8ஜிபி ரேம் உடனான டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது ரூ,10,999 க்கு பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இது 2 இலவச ஸ்கின்களுடன் வருகிறது. இது மிட்நைட் ஷேடோ (Midnight Shadow), அஸூர் ஸ்கை (Azure Sky) மற்றும் அரோரா க்ளவுட் (Aurora Cloud) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி மாடலை போலவே இதுவும் 8ஜிபி வரையிலான மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்தை (Memory Fusion Technology) கொண்டுள்ளது. இதன் மூலம் புதிதாக அறிமுகமான 8ஜிபி ரேம் வேரியண்ட்டின் ரேம்-ஐ 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். எனவே பட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தேடும் இந்திய வாடிக்கையாளர்கள் இவ்விரு மாடல்களில் ஒன்றை நம்பி தேர்வு செய்யலாம்!


Click it and Unblock the Notifications








