சூப்பரு.. ஏற்கனவே இந்த Moto போனின் விற்பனை பிச்சிக்கிட்டு பறக்குது.. இதுல கம்மி விலைக்கு 8GB RAM மாடல் வேறயா!
வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில்.. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரி யூனிட், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.5-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, நியர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் எக்ஸ்பீரியன்ஸ், ஸ்டீரீயோ ஸ்பீக்கர்ஸ், ஐபி52 ரேட்டிங்!
இப்படியாக மோட்டோ ஜி32 (Moto G32) ஸ்மார்ட்போனின் "விலையை மீறிய" அம்சங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். பட்ஜெட் விலையில் அற்புதமான அம்சங்களை வழங்கும் மோட்டோ ஜி32-யின் இந்திய விற்பனை ஏற்கனவே "பிச்சுக்கிட்டு பறக்கும்" நிலையில் இந்த போனின் 8ஜிபி ரேம் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2022 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே வெளியானது. தற்போது மோட்டோ ஜி32-யின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.11,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மார்ச் 22 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. நினைவூட்டும் வண்ணம் 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.10,499. இந்த 2 வேரியண்ட்களுமே சாடின் சில்வர் மற்றும் மினரல் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது 2400 × 1080 பிக்சல் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 406 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.5-இன்ச் ஃபுல் எச்டி+ எலல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டை பேக் செய்கிறது.
டூயல் நானோ சிம் (Dual Nano SIM) ஆதரவுடன் வரும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. கூடிய விரைவில், இந்த போனிற்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் (Android 13 OS Update) கிடைக்கும் என்றும் மோட்டோரோலா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் எல்இடி ஃபிளாஷ் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்ப்ளேவின் மேல்புற மையத்தில் உள்ள பஞ்ச்-ஹோல் (Punch-hole) ஸ்லாட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி32 ஆனது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை (TurboPower Fast Charging) ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டூயல் மைக்ரோஃபோன்ஸ், ஃபேஸ் அன்லாக், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 1டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்குவதற்கான மைக்ரோ எச்டி கார்டு ஸ்லாட், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் போன்றவைகளையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








