தட்டி தூக்குறாங்க.. ரூ.8000 பட்ஜெட்ல 16 அடி பாயுதே.. ஐபோன் டிசைன்ல.. 16GB ரேம், 50MP கேம், 5000mAh பேட்டரி!
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7500 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை தேடிய அனைவரையும் தன்பக்கம் சுண்டி இழுத்தது என்றே கூறலாம். அது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) மாடலாகும்.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலின் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷன் எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) உடன் வரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அவுட் ஆஃப் பாக்ஸில் எக்ஸ்ஓஎஸ் 13 ஸ்கின் (XOS 13 Skin) மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை இயக்குவது ஆக்டா கோர் ஹீலியோ ஜி36 சிப்செட் (Octa-core Helio G36 processor) ஆகும்.
இந்த சிப்செட 4ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே இது 4ஜிபி / 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (4GB Virtual RAM) ஆதரவையும் கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் (Micro SD Card Slot) கொண்டுள்ளது, இதன் கீழ் ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜை 2டிபி வரை விரிவாக்க முடியும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் (HD+ Resolution) மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate) உடனான 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே பேனலில் (ஆப்பிள் ஐஃபோன்களில் காணப்படும் டைனமிக் ஐலேண்ட் போன்ற) மேஜிக் ரிங் (Magic Ring) உள்ளது, இது சார்ஜிங் லெவல் மற்றும் லோ பேட்டரி போன்ற செயல்பாடுகளை காட்சிப்படுத்தும்.
கேமராவை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் இரண்டாம் நிலை ஏஐ லென்ஸ் (Secondary AI lens) உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை 8எம்பி செல்பீ கேமரா பாத்துக்கொள்ளும்.

4ஜி எல்டிஐ ஆதரவு (4G LTE Support) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Side-mounted fingerprint sensor) உள்ளது. கடைசியாக இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-c Port) ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8-ன் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை மற்றும் விற்பனை: முன்னதாக (ஜனவரி 2024ல்) இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மட்டுமே இந்தியாவில் அறிமுகமானது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.7499 ஆகும். தற்போது இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழியாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி விர்ச்சுவல் ரேம் உட்பட மொத்தம் 16ஜிபி ரேம்-ஐ வழங்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலின் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷன் பிப்ரவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








