பிளிப்கார்ட் பிச்சுக்கிச்சு.. ரூ.12,999 க்கு 7000mAh பேட்டரி, 16GB ரேம்.. ஆபர் விலையில் புது POCO போன்!
போக்கோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஆக.19) முதல் தொடங்கியது. என்ன விலை? என்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி முக்கிய அம்சங்கள்: இந்த விலைப்பிரிவில் இதுவரை வெளியான எந்த ஸ்மார்ட்போனில் இவ்வளவு பேட்டரி இல்லை என்கிற அளவிற்கு, 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன் வருகிர்து. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பிற போன்கள் மற்றும் பிற ஆக்சஸெரீஸ்களுக்கான ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே வாங்க கிடைக்கும் போக்கோ எம்7 5ஜி மற்றும் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி மாடல்களுடன் இணைகிறது.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் ஆபர் விவரங்கள்: இந்தியாவில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் - இன்று (ஆகஸ்ட் 19 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக அக்வா ப்ளூ, கார்பன் பிளாக் மற்றும் குரோம் சில்வர் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, HDFC, SBI அல்லது ICICI வங்கி அட்டைகளை பயன்படுத்தினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் அல்லது தகுதியான சாதனங்களுக்கு கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும் (ரூ.12,999 ஆபர் விலை)!
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 288ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.9-இன்ச் FHD+ (1,080×2,340 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே - குறைந்த நீல ஒளி, ஃப்ளிக்கர் இல்லாத மற்றும் சர்க்காடியன் தரநிலைகளுக்கான மூன்று TÜV Rheinland சான்றிதழ்களை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம்- கிட்டத்தட்ட 16ஜிபி வரை விரிவாக்க முடியும். இது 128ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
ஓஎஸ்-ஐ பொருத்தபவரை போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இரண்டு வருட முக்கிய ஓஎஸ் மேம்படுத்தல்கள் மாறும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவையும், குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமராவையும் கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 1080p/ 30fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.
பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி, ப்ளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 169.48×80.45×8.40மிமீ மற்றும் எடையில் 217 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








