செம்ம டிமாண்ட் ஆக போகுது.. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி.. Realme புது 5G போன்.. ரூ.2,500 ஆபரில் விற்பனை!
7000mAh பேட்டரி உடன் ரியல்மி நிறுவனம் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது - ரியல்மி பி4 சீரீஸ் ஆகும். இந்த சீரீஸின் கீழ் ரியல்மி பி4 5ஜி (Realme P4 5G) மற்றும் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சில பொதுவான அம்சங்களை கொண்டுள்ளன. அதாவது இரண்டுமே ஏஐ ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராக்களை கொண்டுள்ளன; 7000mAh பேட்டரி உடன் வருகின்றன; கூடவே 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன. ஆனால் ப்ரோ மாடல் விலை அதிகமான ஸ்மார்ட்போன் ஆகும். வெண்ணிலா மாடல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும்.

இக்கட்டுரையில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம், விற்பனை தேதி மற்றும் விற்பனை சலுகைகள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டரோஜ் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.19,499 மற்றும் ரூ.21,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் கீழ் ரூ.2,500 தள்ளுபடி, ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் பெறலாம்.
வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி நண்பகல் தொடங்கி பரவலாக விற்பனைக்கு வரும் முன்னர், ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வரையறுக்கப்பட்ட ஏர்லி பேர்ட் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும்.
ரியல்மி பி4 5ஜி மற்றும் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன ரியல்மி இந்தியா வலைத்தளம், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்க கிடைக்கும்.
ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் ஹைப்பர் விஷன் சிப்புடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ஆதரிக்கப்படுகிறது. இது 8GB வரையிலான ரேம், 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது.
ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் இது வெப்ப மேலாண்மைக்காக 7,000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது. இதே வீசி கூலிங் சிஸ்டம் ஆனது ப்ரோ வேரியண்ட்டிலும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பல வகையான ஏஐ ஆதரவு அம்சங்களை ஆதரிக்கும் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ எடிட் ஜீனி மற்றும் ஏஐ டிராவல் ஸ்னாப் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. 7.58மிமீ ஸ்லிம் டிசைனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








