Home
Mobile

Samsung-ன் புது சிங்கக்குட்டி.. பட்ஜெட் விலையில் 6GB ரேம், 5000mAh பேட்டரி, 120Hz 6.5-இன்ச் டிஸ்பிளே!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சில மாதங்களுக்கு முன்னர் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (8ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி) மட்டுமே அறிமுகமானது.

ஆக்டா-கோர் மீடியடாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ SoC) கொண்டு இயங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை என்ன? பழைய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகள் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

Samsung-ன் புது சிங்கக்குட்டி.. பட்ஜெட் விலையில் 6GB ரேம்!

புதிய 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை என்ன? புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,999 ஆகும். வங்கி அடிப்படையிலான தள்ளுபடியாக ரூ.1,500 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.16,499 ஆக குறைக்க முடியும்.

முன்னரே குறிப்பிட்டபடி, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.19,499 க்கும் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.22,499 க்கும் வாங்க கிடைத்தது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ பிளாக், ப்ளூ மற்றும் லைட் ப்ளூ என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், அதிகபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடலுடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமானது,. இது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.26,999 ஆகும். மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.29,999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே, 8ஜிபி வரையிலான ரேம், ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

வருகிற மார்ச் 4 ஆம் தேதியன்று சாம்சங் கேலக்ஸி எப்15 (Samsung Galaxy F15) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரி, 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் போன்ற அம்சங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.14,999 க்கு வெளியாகலாம்.

இதுதவிர்த்து சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55) ஸ்மார்ட்போனையும் கூட இந்த மார்ச் மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் இது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். இதன் விலை ரூ.25,000 க்குள் இருக்கும்!

Best Mobiles in India

English summary
New 6GB RAM 128GB Storage Variant of Samsung Galaxy A15 5G Phone Launched in India Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X