கேங்ஸ்டர் இல்ல டா மான்ஸ்டர்.. மாஸ் ஆன அம்சங்கள்.. மலிவான விலை.. புதிய Samsung 5G போன் இந்தியாவில் அறிமுகம்!
சாம்சங் நிறுவனம், மிகவும் பிரபலமான தனது எம்-சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் என்ன? எப்போது முதல் விற்பனைகு வரும்? விவரங்கள் இதோ:
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி அம்சங்கள்: இது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது பெரும்பாலான சாம்சங் போன்களில் உள்ள "பாரம்பரிய வடிவமைப்பான" இன்ஃபினிட்டி யு (Infinity U) டிசனையும் பெற்றுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி எம்34 5ஜி ஆனது ஓஐஎஸ் (OIS0 ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் அல்லது மேக்ரோ சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இதன் கேமரா யூனிட் ஆனது மான்ஸ்டர் ஷாட் 2.0 (Infinity U) என்றழைக்கப்படும் கேமரா-சென்ட்ரிக் அம்சத்துடன் வருகிறது என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்கீழ் நீங்கள் ஒரே டேக்கில் பல ஷாட்களை கிளிக் செய்ய முடியம்; பின்னர் எடுக்கப்பட்ட அனைத்திலும் இருந்து, எது பெஸ்ட் ஷாட் என்பதையும் தேர்ந்தெடுக்க முடியும்.
கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் ஃபன் மோட் (Fun mode) மற்றும் நைட்டோகிராஃபி (Nightography) போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன. சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வன்ணம், இதே சிப்செட் தான் கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி ஏ53 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ33 5ஜி மாடல்களிலும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி விலை மற்றும் விற்பனை: 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.17,999 ஆகும்; மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.18,999 ஆகும். இருப்பினும் வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் நடைபெறும் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது, இரண்டு வேரியண்ட்களின் மீதும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.
அதாவது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூவ்.16,999 க்கும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கும் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் தவிர்த்து சாம்சங் வலைத்தளம் வழியாகவும் விற்பனைக்கு வரும். கடைசியாக இது ப்ரிசம் சில்வர், மிட்நைட் ப்ளூ மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ என்கிற 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








