Home
Mobile

ஆச்சரிய விலையில் Realme-யின் புது 5G போன்.. 6000mAh பேட்டரி, 256ஜிபி மெமரி, IP69 ரேட்டிங்.. என்ன மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டையும் கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆச்சரிய விலையில் Realme-யின் புது 5G போன்!

மேலும் ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 256ஜிபி வரை பில்ட் இன் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பிரிவின் பிரகாசமான AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66+IP668+IP69 ரேட்டிங்களையும் கொண்டுள்ளது.

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 92.7 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 111 சதவீதம் DCI-P3 வைட் கலர் கேமட் மற்றும் இரவில் கண்களின் அழுத்தத்தை குறைப்பதற்கான TÜV ரீன்லேண்ட் சான்றிதழ் ஆகிய அம்சங்கள் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ அம்சத்தையும், ஏஐ ஆதரவுடன் கூடிய இமேஜிங் டூல்களையும் ஆதரிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-C போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக அளவீடுகளில் இந்த போன் 7.97மிமீ தடிமன் மற்றும் எடையில் 196 கிராம் உள்ளது

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைட்னிங் பர்பிள், அப்சிடியன் பிளாக் மற்றும் சர்ஃப் க்ரீன் (Lightning Purple, Obsidian Black, Surf Green) ஆகிய கலர்களில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். முதல் விற்பனை ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரை நடக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 6000mAh Battery Phone Under Rs 20000 Realme 14T 5G Launched in India First Sale Until April 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X