எல்லாமே புதுசு.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 500mAh பேட்டரி.. ரூ.15000 க்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்..
செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக ரெட்மி, மோட்டோ, விவோ, சாம்சங் போன் நிறுவனங்களின் பட்ஜெட் விலை 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல் இந்தியாவில் ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் போன்களை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5ஜி போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

1.மோட்டோரோலா ஜி34 5ஜி (Motorola G34 5G) போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,999 வாங்கக் கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக 4ஜி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி34 5ஜி மாடல்.
அதேபோல் மோட்டோரோலா ஜி34 5ஜி போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, டால்பி அட்மோஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2.ரியல்மி 11 எக்ஸ் 5ஜி (realme 11x 5G) போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 64எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, டைனம்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.
3.சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (SAMSUNG Galaxy F15 5G) போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14.499 விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 13எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில்உள்ளன.
4. போக்கோ எம்65 5ஜி (POCO M6 5G ) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இதில் உள்ளது.

அதேபோல் 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்65 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர 50எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், ஆண்ட்ராய்டு 13, 5எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5.நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.12,499 விலையில் கிடைக்கிறது. இந்த போன் 11ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 5000எம்ஏஎச் பேட்டரி, 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








