யாரு விடுவா? ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் புதிய 5ஜி போன்கள்.. சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி..
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் பட்ஜெட் விலை போன்களுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களின் (5g smartphones) பட்டியலை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன் யுஐ 7 (One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதி இந்த சாம்சங் போனில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா ஜி35 5ஜி (Motorola G35 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா சாதனம்.
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும் 5000mAh பேட்டரி, 20W ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஒஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி35 5ஜி போன். மேலும் 16எம்பி செல்பி கேமரா, IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
போக்கோ எம்7 5ஜி (POCO M7 5G) ஸ்மாரட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
6.88 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போக்கோ வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஐ-சேப் டிஸ்பிளே (Eye-safe Display) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வசதியை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன்.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எம்7 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி செல்பி கேமரா, அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு, சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS), 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது.
48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் (Sony IMX582 sensor) + டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








