Home
Mobile

5G போன் வாங்க அவசரமா? அப்போ தள்ளுபடி விலையில் கிடைக்கும் இந்த டாப் 5 போன்களை பாருங்க.!

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக சாம்சங், சியோமி நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

5ஜி வசதி

அதேபோல் இனி அறிமுகமாகும் அனைத்து போன்கள் 5ஜி வசதியுடன் தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது இந்தியாவில் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

 விவோ டி1 5ஜி

விவோ டி1 5ஜி

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்ப்போம்.

விவோ டி1 5ஜி அம்சங்கள்

விவோ டி1 5ஜி அம்சங்கள்

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 16எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 5000 எம்எஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

பிளிப்கார்ட் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி போனின விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்கிவிட முடியும்.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

 ரெட்மி 11 பிரைம் 5ஜி

ரெட்மி 11 பிரைம் 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.58-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

 ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி

4ஜிபி RAM மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,390-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் Dimensity 810 5G சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 iQOO Z6 5G  போன்

iQOO Z6 5G போன்

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

6.5-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New 5G smartphones available at discounted prices in India! Here is the top 5 list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X