இந்த Realme மாடலின் விலையை சொன்னா.. 5G Phone வாங்குற ஆசை தானா வரும்!

|

5G தொடர்பாக உங்களிடம் பல வகையான கேள்விகள் இருக்கலாம்.

5ஜி எப்போது அறிமுகமாகும்? எந்த டெலிகாம் நிறுவனம், 5ஜி நெட்வொர்க்-ஐ முதலில் அறிமுகம் செய்யும்? 5ஜி சிம் கார்ட்டின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? 5ஜி டேட்டா பிளான்கள் என்ன விலைக்கு வரும்? இப்படி உங்களிடம் பல கேள்விகள் இருக்கலாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! முதலில் உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறதா? இல்லை என்றால்.. முதலில் நீங்கள் அதைப்பற்றி தான் யோசிக்க வேண்டும்!

5G Phone இல்லாமல் 5ஜி சிம் எதுக்கு? 5ஜி ரீசார்ஜ் எதுக்கு?

5G Phone இல்லாமல் 5ஜி சிம் எதுக்கு? 5ஜி ரீசார்ஜ் எதுக்கு?

உண்மைதானே! உங்களிடம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் இல்லையென்றால், உங்களிடம் இருக்கும் 5ஜி தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் என்ன.. தெரியாவிட்டால் என்ன?

முதலில் நீங்கள் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை அல்லது குறைந்தபட்சம் பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போனையாவது வாங்க வேண்டும். பின்னரே 5ஜி சிம் கார்டு மற்றும் 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் குறித்து கவலைப்பட வேண்டும். சரிதானே?!

Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!

அப்படி ஏதாவது ஒரு நல்ல, பட்ஜெட் விலை 5G போன் இருக்கிறதா?

அப்படி ஏதாவது ஒரு நல்ல, பட்ஜெட் விலை 5G போன் இருக்கிறதா?

இருக்கிறது - அது ரியல்மி நிறுவனத்தின் Realme 9i 5G ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இது மிக மிக லேட்டஸ்ட் ஆன 5ஜி ஸ்மார்ட்ர்போன் ஆகும்.

எவ்வளவு லேட்டஸ்ட் என்றால்? இது வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி தான் இந்தியாவிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பளபளக்கும் பேக் பேனல்.. வெறியான கேமரா செட்டப்!

பளபளக்கும் பேக் பேனல்.. வெறியான கேமரா செட்டப்!

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் ஆனது ரியல்மி இந்தியா இணையதளத்தில் ஏற்கனவே நேரலைக்கு வந்துவிட்டது. அதன் வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் "அட்டகாசமான" பின்புற வடிவமைப்பையும், அதன் ப்ராசஸரை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்!

இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

Realme 9i 5G-யின் முன்பக்கமும், பின்பக்கமும்!

Realme 9i 5G-யின் முன்பக்கமும், பின்பக்கமும்!

Appuals வழியாக லீக் ஆன Realme 9i 5G-யின் ரெண்டர்கள் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் டியர் டிராப் நாட்ச் (டிஸ்பிளே) வடிவமைப்பு உள்ளதை அறிய முடிகிறது.

பின்பக்கத்தை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பார்க்க முடிகிறது. அதில் இரண்டு பெரிய கேமராக்களையும், 1 சிறிய கேமராவையும், உடன் ஒரு பிளாஷையும் காண முடிகிறது.

ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் பவர் பட்டன் உள்ளது, அதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உட்பொதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை மீறிய நல்ல, தரமான டிஸ்பிளே & சிப்செட் இருக்குமா?

விலையை மீறிய நல்ல, தரமான டிஸ்பிளே & சிப்செட் இருக்குமா?

Realme 9i 5G ஆனது 6.6-இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி பேனலை கொண்டிருக்கலாம், இது Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சம்ப்ளிங் ரேட் போன்ற ஆதரவுகளை வழங்கலாம்.

இந்த லேட்டஸ்ட் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 OS அடிப்படையிலான Realme UI 3.0 மூலம் இயங்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி, இது Dimensity 810 சிப்செட் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவி இது 6 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் இது 5ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் எதிர்பார்க்கலாம். கூடுதல் ஸ்டோரேஜிற்காக, இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் கொண்டிருக்கும்.

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

கேமரா டிசைன் மட்டும் தான் வித்தியாசமா..? அல்லது..?

கேமரா டிசைன் மட்டும் தான் வித்தியாசமா..? அல்லது..?

கேமராக்களை பொறுத்தவரை, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறலாம். பேக் பேனலில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் + 4செமீ ஃபோக்கல் லெங்த்-ஐ வழங்கும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இடம்பெறலாம்.

இதன் கேமரா செட்டப்பை பார்க்கும் போதே.. இது லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன்களில் உள்ள கேமராக்களை போலவே "வடிவமைக்கப்பட்டுள்ளன" என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதன் கேமரா திறன்களை அறிமுகத்திற்கு பின்னரே தெரிந்துகொள்ள முடியும்!

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்?

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்?

இந்தியாவில் Realme 9i 5G ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டில் ரூ.15,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Photo Courtesy: Realme

Best Mobiles in India

English summary
New 5G Smartphone Realme 9i India Launch on August 18 Check Price Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X