டிசம்பர் 2.. இந்த தேதியை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க! லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் ஒரு புது போன் வருது!
விவோ நிறுவனத்தின் துணை பிராண்டு ஐகூ வரும் டிசம்பர் 2-ம் தேதி ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

iQoo 11 5G ஸ்மார்ட்போன்
அதேபோல் iQoo 11 5G ஸ்மார்ட்போன் முதலில் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்பின்பு மாற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் இணையத்தில் கசிந்த இந்த iQoo 11 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சிறந்த செயல்திறன்
iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் 40 சதவீத அதிக மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறன் கொண்டிருக்கிறது. எனவே இந்த iQoo 11 ஸ்மார்ட்போன் அறிமுகமானால் நம்பி வாங்கலாம்.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
அதேபோல் இந்த iQOO 11 5G ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனினின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

iQOO 11 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா
iQOO 11 5G ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
விரைவில் அறிமுகமாகும் iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேசமயம் சில நிமிடங்களில் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு 13
மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications