Home
Mobile

மார்ச் 27 முதல்.. மார்க்கெட்ல இது ராஜா! ரூ.17,999க்கு.. 120Hz டிஸ்பிளே, 4K கேமரா, 44W சார்ஜிங், IP54 ரேட்டிங்!

ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஐடியா உள்ளவர்கள்.. விவோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் மாடலை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே விரிவாக பார்க்கப்போவது விவோ டி3 5ஜி (Vivo T3 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இன்று (மார்ச் 21) இந்தியாவில் அறிமுகமான விவோ டி3 5ஜி மாடலானது, கடந்த ஏப்ரல் 2023 இல் வெளியான விவோ டி2 5ஜி (Vivo T2 5G) மாடலுக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு பிறகு வருகிறது.

Vivo T3 5G அறிமுகம்.. மார்ச் 27 முதல் விற்பனை.. என்ன விலை?

என்ன விலை? விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue) மற்றும் கிரிஸ்டல் ஃப்ளேக் (Crystal Flake) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன ஆபர் கிடைக்கும்? பிளிப்கார்ட் வலைத்தளத்தின்படி எச்டிஎப்சி (HDFC) மற்றும் எஸ்பிஐ (SBI) பேங்க் கார்டுகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி (Instant Offer) கிடைக்கும் அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகையின் (Exchange Offer) கீழ் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இதன்கீழ் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.17,999 க்கு கொண்டுவர முடியும்.

Vivo T3 5G அறிமுகம்.. மார்ச் 27 முதல் விற்பனை.. என்ன விலை?

எப்போது முதல் விற்பனை? விவோவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் (Vivo India online store) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக மார்ச் 27 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் நாவிற்பனைக்கு வரும்.

என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது.

Vivo T3 5G அறிமுகம்.. மார்ச் 27 முதல் விற்பனை.. என்ன விலை?

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (Octa-core MediaTek Dimensity 7200 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு (LED Flash Support) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation - OIS) உடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி டெப்த் சென்சாரை கொண்டுள்ளது.

Vivo T3 5G அறிமுகம்.. மார்ச் 27 முதல் விற்பனை.. என்ன விலை?

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவை பொறுத்தவரை, இதற்கென டிஸ்பிளேவின் மேற்புறத்தில் மையப்படுத்தப்பட்ட ஹோல்-பஞ்ச் கட்அவுட் (Centred hole-punch cutout) உள்ளது. அதில் 16எம்பி சென்சார் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை,இது 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் (Dust and splash) எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் (IP54 Rating) உள்ளது. கடைசியாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (In-display fingerprint sensor) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 5G Phone Under Rs 20000 Vivo T3 5G Price Specifications Sale Starts on March 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X