Home
Mobile

மார்க்கெட் காலி.. ரூ.13,000 க்கு புது OPPO போன்.. 5ஜி, 50MP கேமரா, 45W சார்ஜிங், 6000mAh பேட்டரி.. என்ன மாடல்?

ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையிலான ஒரு புதிய கே சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அது ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G) மாடலாகும். எப்போது அறிமுகம் ஆகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது - 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் சிப், 80W சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி போன்ற ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் அறிமுகமான ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G) ஸ்மார்ட்போனிற்கு கீழே நிலைநிறுத்தப்படலாம்.

மார்க்கெட் காலி.. ரூ.13,000 க்கு புது OPPO போன்.. என்ன மாடல்?

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கூகுள் பிளே கன்சோலின் படி, ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்டால் இயக்கப்படும் மற்றும் 4ஜிபி ரேம்-ஐ கொண்டிருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (அவுட் ஆப் பாக்ஸ்) உடன் அனுப்பி வைக்கப்படும்

மேலும் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் வரும். கேமராக்களை பொறுத்தவரை 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் வரும், அதனுடன் 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸும் இருக்கும். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 8-மெகாபிக்சல் கேமரா இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

கூகுள் பிளே கன்சோல் மற்றும் கூகிள் சப்போர்ட் டிவைஸ்களில் வெளிவந்த தகவல்களின்படி, ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அடிப்படையில் ஒப்போ ஏ5 5ஜி (Oppo A5 5G) ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம். அதாவது உலகளவில் வெளியிடப்பட்ட ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்

இந்திய சந்தையில் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியான ஒப்போ கே12எக்ஸ் 5ஜி மாடலை போன்ற விலை நிர்ணயத்தையே பெறலாம். அதாவது இது சுமார் ரூ.13,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். சரியான வெளியீட்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை; இருப்பினும் இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் (Panda Glass protection) உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 அனுப்பப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 2எம்பி போர்ட்ரெய்ட் சென்சிங் யூனிட்டுடன் 32எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100mAh செல்லை பேக் செய்கிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் Uயூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஐபி54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் MIL-STD-810H இராணுவ தர நீடித்து நிலைத்திருக்கும் பாலிகார்பனேட் பாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 186 கிராம் ஆகும், அளவீட்டில் இது 7.68 மிமீ தடிமன் உள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும் அறிமுகமானது!

More from GizBot

Best Mobiles in India

English summary
New 5G Phone Under Rs 15000 Budget Oppo K13x 5G Launching Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X